அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற கார் மீட்பு

அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரந்தெனிய-எகொடவெல சந்தியில் சந்தேக நபர்களால் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னர் பெங்வல-எகொடவெல வழியாக பயணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இன்று (4) காலை இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Ceylon Petroleum Corporation
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!
Suresh Saleh
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!
meta
சிறுவர்களுக்கு ஆபத்தா? மெட்டாவுக்கு நீதிமன்றம் அதிரடி
power cut
மின்சாரத் தடையைத் தவிர்க்க வேண்டுமா? நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு!
jaffna police issue
யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய பொலிஸார் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
fuel
எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா 'ஒற்றை மற்றும் இரட்டை' இலக்க முறைமை?