கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் பாரிய விபத்து: 18, 19 வயது இளைஞர்கள் உயிரிழப்பு!

கிளிநொச்சி, தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞர்கள் 19 மற்றும் 18 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

வீதியில் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தின் மீது பின்னால் சென்ற உந்துருளி மோதி விபத்துக்குள்ளானது.

உயிரிழந்த இரு இளைஞர்களின் உடலங்களும் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

negombo prison
கடமையின் போது உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரணத்தின் பின் பதவி உயர்வு; தலா 5 இலட்சம் இழப்பீடு!
colombo
பறவை மோதியதால் அவசர நிலை: கட்டுநாயக்கவில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாகத் தரையிறங்கிய துருக்கி விமானம்!
anura kumara dissanayake
பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற நிறுவனங்களை மூட ஜனாதிபதி உத்தரவு!
prison
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
jaffna
யாழ்ப்பாணத்தில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை: காரில் வாள்கள், ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது!
buddhist monk
"சிறுமிகளுக்கு நேரும் கொடூரம்; மதத்தலைவர்கள் தப்பி ஓட சட்டம் இடமளிக்கலாமா?"