யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!

பப்ஜி விளையாட்டு தோல்வியால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அகிப் சிவகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் அண்மையில் உயிர்மாய்க்க முயன்றுள்ளார்.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார்.

அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி, அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது, கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்தவேளை வீட்டார், தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்தும் இளைஞன் பப்ஜி விளையாட்டுக்காக பெருந்தொகை பணத்தினை மீட்டர் வட்டிக்கு வாங்கி செலவழித்துள்ள நிலையில், கடன் கொடுத்தவர்கள் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்த போதிலும், வீட்டார் இம்முறை கடனை செலுத்த மறுத்ததால், இளைஞன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

உயிர்மாய்க்க முயன்ற இளைஞனை வீட்டார் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்