இலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தல்!

இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 125 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சீன அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட விசேட விமானம் மூலம் அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 17ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் உள்ள பல விடுதிகளில் தங்கியிருந்து இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்த போதே, குறித்த சீனப் பிரஜைகள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினராலும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் சுற்றுலா மற்றும் வர்த்தக விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகை தந்த பின்னர், குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் வெலிசரவில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சீன குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றும், வைத்தியர் ஒருவரும் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

நேற்றிரவு குறித்த சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டதுடன், அவர்களுடன் இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகள் கொண்ட குழுவொன்றும் சீனா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்