கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து பி.மரியதாசன் (வயது 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தவேளை நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

செய்தி: பு.கஜிந்தன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!