போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளின் போது காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பென்டகன் (Pentagon) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தரைப்படை, வானூர்திப்படை, கடற்படை, மெரைன் படை உள்ளிட்ட நான்கு பிரிவுகளையும் சேர்ந்த 365 படையினர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரைப்படையைச் சேர்ந்த 247 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று கடற்படையை சேர்ந்த 63 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

அதேபோன்று வானூர்திப்படையை சேர்ந்த 36 பேரும் மெரைன் படைப்பிரிவை சேர்ந்த 19 வீரர்களும் படுகாயமடைந்துள்ளனர் .

மேலும், இந்தப் போர் நடவடிக்கைகளின் காரணமாக இதுவரை 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் ஏற்பட்ட இழப்புகளே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்