பயணிகளை இறக்க நின்ற பேருந்து மீது மோதிய தனியார் பேருந்து: 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

புத்தள - மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான (CTB) பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று (24) காலை விபத்தொன்று சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் மொனராகலை மாவட்ட…

Continue Readingபயணிகளை இறக்க நின்ற பேருந்து மீது மோதிய தனியார் பேருந்து: 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

சங்கானையில் சர்ச்சை: அசுவெசும பயனாளிகள் அத்தம திட்டத்திற்கு வர வேண்டும் – பிரதேச சபை உறுப்பினரின் பேச்சால் மக்கள் விசனம்!

கிளீன் சிறீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் அத்தம வேலைத் திட்டத்திற்கு, அசுவெசும கொடுப்பனவு பெறுபவர்கள் வரவேண்டும் என்று பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கூறிய விடயம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மேற்குறித்த…

Continue Readingசங்கானையில் சர்ச்சை: அசுவெசும பயனாளிகள் அத்தம திட்டத்திற்கு வர வேண்டும் – பிரதேச சபை உறுப்பினரின் பேச்சால் மக்கள் விசனம்!

மாங்குளத்தில் பயங்கரம்: மகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் – தம்பதி உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (24) அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் அத்துமீறி…

Continue Readingமாங்குளத்தில் பயங்கரம்: மகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் – தம்பதி உயிரிழப்பு!

பாதுகாப்பற்ற ரயில்வே கடவையால் பறிபோன உயிர்! யாழ்ப்பாணத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்து!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆராய்ச்சி கடமையில் பணியாற்றி வந்த நாகராசா சூரியகுமார் இன்று (23.09.2026) நண்பகல் அரியாலை புங்கன்குளம் ரயில்வே கடவையில் இடம்பெற்ற விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் தனது மகளை ஏற்றிக்கொண்டு சென்றவேளை…

Continue Readingபாதுகாப்பற்ற ரயில்வே கடவையால் பறிபோன உயிர்! யாழ்ப்பாணத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்து!

வடக்கில் ஜப்பான் முதலீடுகள்? ஜப்பானியத் தூதுவர் – ஆளுநர் சந்திப்பில் வெளியான முக்கியத் தகவல்!

வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ ஐசோமாதா, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்குப்…

Continue Readingவடக்கில் ஜப்பான் முதலீடுகள்? ஜப்பானியத் தூதுவர் – ஆளுநர் சந்திப்பில் வெளியான முக்கியத் தகவல்!

ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தி அதிகாரம் பெற முயன்றவர்கள் யார்? கத்தோலிக்க சபை கேள்வி!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சதித்திட்டம் தீட்டிய மற்றும் அதற்கு உதவி, ஆதரவு வழங்கியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் திருப்தியடைவதாக கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த வழக்கின் தீர்ப்புக்காக பாதிக்கப்பட்டவர்கள் காத்திருந்ததாகவும், உயிரிழந்த…

Continue Readingஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தி அதிகாரம் பெற முயன்றவர்கள் யார்? கத்தோலிக்க சபை கேள்வி!

வங்காள விரிகுடாவில் வலுவடைந்தது தாழ் அமுக்கம் – இலங்கையின் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் வடமேற்குத் திசையில் நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கமானது சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமாக வலுவடைந்துள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்…

Continue Readingவங்காள விரிகுடாவில் வலுவடைந்தது தாழ் அமுக்கம் – இலங்கையின் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

கட்டுநாயக்க நோக்கி வந்த வியட்ஜெட் விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனம்!

வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. 143 பயணிகளுடன் பயணித்த வியட்ஜெட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான A320 விமானம், நேற்று இரவு இயந்திரக் கோளாறு காரணமாக சென்னை…

Continue Readingகட்டுநாயக்க நோக்கி வந்த வியட்ஜெட் விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனம்!

கொழும்பு மேல் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு: நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி

2019 உயிரத்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு நிரந்தர…

Continue Readingகொழும்பு மேல் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு: நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி

யாழ். சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட கைதி மயங்கி விழுந்து மரணம்: சிறை நிர்வாகம் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்ட கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட அன்றைய தினம் திடீரென மயங்கி விழுந்ததால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் சந்தேக நபரான இளவாளைப் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 39…

Continue Readingயாழ். சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட கைதி மயங்கி விழுந்து மரணம்: சிறை நிர்வாகம் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு!